Loading . . .




தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 23,742 பயனாளிகளுக்கு 125.50 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்

The Forecast 2 years ago உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., மாநில அளவிலான வங்கியாளர் கூட்டமைப்பின் தலைவர் மோகன்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நேற்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் நகர்ப்புரப் பகுதிகளில் செயல்படும் 1,877 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளைச் சேர்ந்த 23,742 பயனாளிகளுக்கு 125.50 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழங்கி விழாப் பேருரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்திட நமது அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நகர்ப்புரப் பகுதிகளில் விற்பனை செய்திட ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் பூமாலை வணிக வளாகங்கள் புனரமைக்கப்பட்டு, உங்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் சுய உதவிக் குழுக்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்திட மதி சந்தை என்ற இணையதளம் மற்றும் மதி கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் அவர்கள் பலமுறை கூறியது போல், இந்தக் கடனுதவிகளை கடன் தொகையாகப் பார்க்காமல், உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைத் தொகையாகத் தான் நமது அரசு கருதுகிறது. எனவே கடனுதவி பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., மாநில அளவிலான வங்கியாளர் கூட்டமைப்பின் தலைவர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், வங்கியாளர்கள், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

உதயநிதி ஸ்டாலின் Relateted News