47வது சென்னை புத்தகக் காட்சி 2024யை தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளை எழுத்தாளர்களுக்கு வழங்கினார் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
The Forecast 2 years ago உதயநிதி ஸ்டாலின்
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, நந்தனம், ஓய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 47-வது சென்னை புத்தகக் காட்சி 2024-யை தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளை எழுத்தாளர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே. முருகன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments