Loading . . .




காணொலி மூலம் நேற்று நடைபெற்ற 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது : முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.பி.கனிமொழி பங்கேற்றனர்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் எம்.பி.யும் துணைப் பொதுச் செயலருமான கனிமொழி, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத, பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்பட 14 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேயை நியமிக்க ஒருமித்த 9 முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியானது இதுகுறித்து கூட்டணி வட்டாரங்கள் கூறுகையில், 'இந்தியா' கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கேயை நியமிக்க ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்தன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News