Loading . . .




தமிழ்நாடு பொதுப்பணித்துறைகாக ரூ.23.05 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட கட்டடங்கள் அமைச்சர்கள் தலைமையில் திறந்து வைகப்பட்டது

The Forecast 2 years ago உதயநிதி ஸ்டாலின்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். பி.சந்தரமோகன் இ.ஆ.ப.,

சென்னையில் பொதுப்பணித்துறையில் முதன்மைத் தலைமைப் பொறியாளர் அலுவலகமும், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் அலுவலகமும் ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. அதுமட்டுமன்றி சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்கு போதிய இடவசதி இல்லாததால், தனியாக கட்டடம் கட்ட வேண்டும் என்று உத்தேசிக்கப்பட்டது. அதன் அடிபடையில் “தலைமைப் பொறியாளர் (கட்டடம்) சென்னை மண்டலத்திற்கான புதிய அலுவலக கட்டடம்“ ரூ.23.05 கோடி செலவில்  கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இக்கட்டடம் மூன்று தளங்களுடன் 1,04,049 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.  

முதல் தளத்தில் தலைமைப் பொறியாளர் அறை மற்றும் அலுவலகங்கள், கோட்டப் பொறியாளர் (மின் I&II) அலுவலகங்களும், இரண்டாம் தளத்தில் தலைமை கட்டடக் கலைஞர் அறை மற்றும் அலுவலகங்கள், நூலகம் மற்றும் கலந்தாய்வுக் கூடமும், மூன்றாம் தளத்தில் கண்காணிப்புப் பொறியாளர் (திட்டம் மற்றும் வடிவமைப்பு) அறை மற்றும் அலுவலகங்கள், கூட்ட அரங்கு மற்றும் பிற கட்டட கட்டுமான உபகோட்டம் அலுவலகங்கள் செயல்படவுள்ளது.

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், பொதுப்பணித்துறை வளாகத்தில் மகளிருக்கான உணவுக் கூடம். ரூ.70.00 லட்சம் செலவில் கட்டப்பட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் நேற்று திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. மேலும் சென்னை, தரமணி, பொதுப்பணித்துறை வளாகத்தில் நுழைவாயில் அமைக்கும் பணி ரூ.35 லட்சம் செலவில் முடிவடைந்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களுக்கு 20 வகையாக ஆய்வக உபகரணங்கள், 20 வகையான கள ஆய்வு உபகரணங்கள் ஆக 40 வகையான சிவில் உபகரணங்கள் மற்றும் 8 வகையான மின் உபகரணங்கள் ரூ.6.80 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். பி.சந்தரமோகன் இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கே.ஆயிரத்தரசு இராஜசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

உதயநிதி ஸ்டாலின் Relateted News