மக்களவைத் தேர்தலில் 97 கோடி வாக்காளர்களுக்காக 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இ.ஆ.ப.
டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இ.ஆ.ப., கூறியதில், தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை 400 தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 17 மக்களவைத் தேர்தல்களும் அடங்கும். தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள 18-வது மக்களவைத் தேர்தலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
மேலும் , வாக்காளர் பட்டியலில் புதிதாக 1.82 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 49.7 கோடி பேர் ஆண்கள், 47.1 கோடி பேர் பெண்கள். 48,000 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். தேர்தல் பணியில் 1.5 கோடி அலுவலர்கள் ஈடுபடுவார்கள். 55 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். இந்த செயலியில் புகார் அளித்த 100 நிமிடங்களில் தேர்தல் குழு சம்பவ இடத்துக்கு செல்லும். வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முன் வர வேண்டும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இ.ஆ.ப., தெரிவித்தார்.
0 Comments