Loading . . .




கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷ்ரவன் குமார் இ.ஆ.ப., இயந்திரங்கள் வைக்கப்படும் (ஸ்ட்ராங் ரூம்) அறைகளை ஆய்வு மேற்கொண்டார்

The Forecast 2 years ago கள்ளக்குறிச்சி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் (ஸ்ட்ராங் ரூம்) அறைகள் பாதுகாப்பு குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷர்வன் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தொடர்ந்து வாக்கு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவையும் பார்வையிட்டு வாக்குப்பதிவு செய்து முறையாக இயந்திரம் வேலை செய்கிறதா? மற்றும் வாக்கு இயந்திரம் பயன்படுத்தும் முறையில் குறித்தும் எடுத்துரைத்தார். ஆய்வின்போது ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, ஆத்தூர் டி. எஸ். பி., சதீஷ்குமார் மற்றும் வட்டாட்சியர்கள் என பலர் உடன் இருந்தனர்.

0 Comments

Post your comment here

கள்ளக்குறிச்சி Relateted News