வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசிய சிந்தனையாளர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் வி.கார்த்திகேயன் பாண்டியன் இ.ஆ.ப.,
ஒடிசா அதன் வரலாற்று சித்தார்ந்தங்கள் மற்றும் கண்கவர் இயற்கைக்காட்சிகளுக்கு பிரபலமானது. மக்கள் நலனை பாதுகாப்பது முதல் ஆட்சி அதிகாரத்திலும் சிறந்த விளங்கும் ஒரு மாநிலம் ஒடிஷா. இம்மாநில அரசாங்கத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் இந்திய அரசியல் சாணக்கியவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார், இவர் ஒடிசாவின் தற்போதைய மற்றும் 15வது முதலமைச்சராக 2000 ஆம் ஆண்டு முதல் ஹிஞ்சிலி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மேலும், அவர் ஒடிசாவின் மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்து வருகிறார் மற்றும் 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் 2 வது நீண்ட காலம் முதல்வராக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பதவியை வகித்து வருகிறார். இவரது உண்மையும் மென்மையுமான நடத்தை மட்டுமின்றி "ஊழலுக்கு எதிராக நிற்பது" மற்றும் "ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள்" ஆகியவை ஒடிசாவில் இவருக்கு ஒரு பெரிய ஆதரவு தளத்தை உருவாக்கி, கடந்த ஐந்து முறை தொடர்ந்து அவரை ஆட்சியில் அமரவைத்துள்ளது. தேசிய பாராளுமன்றத்திலும் மாநிலத்தின் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்குவதற்கான அவரது அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு 2019 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை, முதலமைச்சர் நவீனை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
1999ல் பாரடிப் புயலிலின் பேரழிவை சந்தித்திருந்தது ஒடிசா. அச் சூறாவளியில் 10,000 பேர் பலியனார்கள். அந்த கடினமான நேரத்தில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, வி.கார்த்திகேயன் பாண்டியன் இ.ஆ.ப., அரசு அதிகாரியாக தனது வாழ்க்கையைத் ஒடிசாவில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரையும் ஒருங்கிணைத்து பெரும் பங்காற்றினார். அதனை தொடர்ந்து 2004 இல், ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக திவாலாகியிருந்த ரூர்கேலா மேம்பாட்டு முகமைக்கு (RDA) அதிகாரியாக தலைமையேற்றார். பாண்டியனின் திறமைமிக்க தலைமைத்துவத்தினால் அவர் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில், ஆர்.டி.ஏ., 15 கோடி உபரி லாபம் பார்த்தது.
இவரின் ஆளுமையை உணர்ந்து நவீன் அரசு 2005ல், ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச்சுக்கு மாவட்ட கலெக்டராக நியமித்தது. அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தி வருடத்திற்கு 700 சான்றிதழ்களில் இருந்து 19,000 சான்றிதழ்களாக விநியோகம் அதிகரிக்க உதவினார். மயூர்பஞ்சில் அவர் செய்த பணிக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றார். மயூர்பஞ்சில் அரசு அதிகாரியாக பெற்ற வெற்றிக்குப் பிறகு, PWD சான்றிதழ்களுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு தேசிய மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அச்சமயத்தில் கார்த்திகேயன் பாண்டியன் மட்டுமே ஹெலன் கெல்லர் விருதைப் பெற்ற ஒரே அரசு ஊழியர் என்ற பெருமையுடன் பதவிவகித்தார்.
மேலும், பாண்டியன் அவர்கள் கஞ்சம் மாவட்ட கலெக்டராக இருந்தபோது, வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலை பாதுகாப்பை வழங்கவும் NREGS ஐ அறிமுகப்படுத்தினார். இதன்முலம் முதல் முறையாக ஊதியத்திற்கான வங்கிக் கட்டண முறையைத் தொடங்கினார். மேலும் தொழிலாளர் கொடுப்பனவுகள் நேரடியாக ஊதியம் பெறுபவருக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய 1.2 லட்சம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கினார். இத்திட்டத்தின் மூலம் பலர் பெரும் உதவியை பெற்றான். அதன் காரணமாக பாண்டியன் IAS நாட்டின் சிறந்த மாவட்டத்திற்கான NREGSக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். மக்களுக்கான இவரின் அயராத உழைப்பு 2011ஆம் ஆண்டில், IAS அதிகாரி பாண்டியன் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2023 வரை தனிச் செயலாளராக பதவியில் தனது பயணத்தை தொடர்ந்தார்.
2019 இல், கார்த்திகேயன் பாண்டியன் 5T, (மாற்ற முயற்சிகள்) செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பகுதியாக ஒடிசாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1000, இளைஞர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ.10,000, அதுமட்டுமன்றி மாநில பெண்களுக்கு 0% வட்டியில் 5 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும், உணவுப் பற்றாக்குறை மாநிலமாக இருந்த, ஒடிசா இப்போது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக மாறுவதற்கு இவரின் பங்கு பெரும் பங்காக அமைந்தது.
மக்களின் தேவைகளை அறிந்து நன்கு பணியாற்றிய கார்த்திகேய பாண்டியன் விளையாட்டுத்துறையிலும் தனது முழு முயற்சியை கொடுத்து விளையாட்டு துறையை மேம்படுத்த உழைத்தார். இந்திய தேசிய ஹாக்கி அணிக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) ஸ்பான்சர் செய்வதிலிருந்து, தொடர்ந்து இரண்டு முறை ஆண்கள் FIH ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவது வரை இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பாண்டியன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரிடம் இருந்து விருதைப் பெற்றார்.
தனது மாநிலத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்த பாண்டியன் அக்டோபர் 2023 இல், தனது அதிகாரத்துவப் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பாண்டியன் முறைப்படி பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார். மேலும், விருப்ப ஓய்வுக்கு பின்பு பட்நாயக் அரசு அவரது மக்கள் சார்ந்த உறவை மேம்படுத்த கேபினட் அமைச்சர் அந்தஸ்தை அவருக்கு அளித்தது. அது மட்டுமின்றி 5T (Transformational Initiatives - மாற்றத்திற்கான முயற்சிகள்) தலைவராக நியமிக்கப்பட்டார்.
23 ஆண்டுகள் ஒரு மாநிலத்திற்காக இரவு பகல் பார்க்காமல் நேர்மையாகவும் கண்ணியமாகவும் தனது முழு உழைப்பையும் ஒரிசா மக்களுக்காக அளித்த அரசு அதிகாரி வி.கார்த்திகேயன் பாண்டியனை;வேற்று மாநிலத்தவர் என்று பாராமல், இனம், மொழி, மதம் என பல வேறுபாடுகளை உடைத்து பாண்டியனுக்கு பெரும் பதவிகளை அளித்து அவரை கௌரவித்துள்ளது ஒரிசா அரசு. மாநில முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாநில மக்கள் என அனைவரின் மனதையும் தனது உண்மையான உழைப்பினால் கவர்ந்த நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியாக வலம்வருகிறார் கார்த்திகேயன் பாண்டியன். அரசு அதிகாரியாக பணியாற்றியவர் தற்போழுது அரசியல்வாதியாக உருவெடுத்தது மக்கள் நலனுக்காக மட்டுமே என தனது வாழ்நாட்களை அர்ப்பணித்து வாழ்வது இவரின் சமூக உணர்வைக்கு சான்று. மேலும், அவரை பற்றி மாநில அளவில் இருந்த மதிப்பு தற்போது இந்திய பிரதமர் மோடியின் உரையால் தேசிய அளவில் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments