கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுடன், முதல் 100 நாட்கள் திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய அரசின் முதல் 100 நாட்கள் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், பொது சிவில் சட்டம், வழிபாட்டு சட்டத்தில் திருத்தம், மகளிர் இடஒதுக்கீடு, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவதை தடுப்பது தொடர்பான சட்டம், சிஏஏ சட்டஅமலாக்கம், புதிய கல்வி கொள்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.
0 Comments