Loading . . .




வரும் 24’ம் தேதி 18 வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கூடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. அதனைத் தொடர்ந்து, வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் இரு நாட்கள் புதிய எம்பிக்களின் பதவியேற்பு விழா நடைபெறும். மேலும், பாஜக மூத்த தலைவர் ராதா மோகன் சிங் மக்களவையின் தற்காலிக தலைவராக இருந்து புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News