அசாமில் மாநிலத்தில் கன மழைபெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது : மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 100 மீட்பு முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
அசாமில் மாநிலத்தில் தொடர்ந்து கன மழைபெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தின் முக்கிய இடங்களான காம்ரூப், தமுல்பூர், ஹைலகண்டி உள்ளிட்ட 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளன. மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு, சூறாவளி காற்று உள்ளிட்டவற்றில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவரை காணவில்லை. மேலும், ஒட்டுமொத்தமாக 3.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கரீம்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தால் 2 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 100 மீட்பு முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை விநியோகம் செய்ய 125 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புப் பகுதிகள், கால்நடை கொட்டில்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் கூறினர்.
0 Comments