பொதுத்துறை வங்கியில் கிளார்க் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம்
Janani G 1 year ago வேலையும் - வாய்ப்பும்
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், ஜூலை 28ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 665 உட்பட நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 6,128 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், www.ipbs.in என்ற இணையதளம் மூலமாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது.
0 Comments