Loading . . .




சமூக நீதி சார்ந்த தந்தை பெரியார் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி

The Forecast 1 year ago உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில், சமூக நீதி சார்ந்த தந்தை பெரியார் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., வடச்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப. சிவகுமார் (எ) தாயகம் கவி, டாக்டர். நா. எழிலன், AMV. பிரபாகர ராஜா,  RD. சேகர், இ. பரந்தாமன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப., பெருநகர் சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ் குமார் திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், வழக்கறிஞர் சே.மெ. மதிவதனி, ட்ரான்சென் டைனமிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கெனித்ராஜ் அன்பு, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

உதயநிதி ஸ்டாலின் Relateted News