இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 54.20 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்
The Forecast 1 year ago உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, தென்கொரியாவில் நடைபெற உள்ள 2024 உலக டேக்வாண்டோ ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு செலவீனத் தொகையாக ரூ.3 இலட்சத்திற்கான காசோலை வழங்கினார்.
மேலும் கம்போடியாவில் 06.10.2024 முதல் 13.10.2024 வரை நடைபெற உள்ள ஆசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள 5 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.2.50 இலட்சம் மற்றும் உஸ்பெக்கிஸ்தானில் 24.09.2024 முதல் 29.09.2024 வரை நடைபெற உள்ள கிக் பாக்ஸிங் உலக கோப்பைப் போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர், வீராங்கனைகளுக்கு செலவீனத் தொகையாக தலா ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி இ.ஆ.ப, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
0 Comments