Loading . . .




தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

The Forecast 1 year ago தூத்துக்குடி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள், முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எல். மதுபாலன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தூத்துக்குடி Relateted News