செங்கல்பட்டு மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
The Forecast 1 year ago தமிழ்நாடு
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கூடுவாஞ்சேரி – சிங்கபெருமாள் கோயில் இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இரயில்வே கடவு எண்.47க்கு பதிலாக, புதியதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தை நேற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர், மகாபலிபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை, சென்னை எல்லைச் சாலை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டதால், இத்திட்டத்துடன் இருப்புப் பாதை கடவு எண்.47இல் மேம்பாலம் அமைக்கும் பணியையும் இணைக்க முடிவு செய்யப்பட்டு, பாலப்பணியில் அதற்குரிய வடிவ மாற்றங்கள் செய்யப்பட்டு, ரூ.138.27 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. திருப்பெரும்புதூர் பக்கம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை மார்க்கத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்கள்.
இந்த திறப்பு விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.இராஜா, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ம.வரலெட்சுமி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் D.பாஸ்கரபாண்டியன் இ.ஆ.ப., சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர் மற்றும் பகுதி பொறுப்பாளர்களும், துறைச் சார்ந்த அலுவலர்களும் உடனிருந்தனர்.
0 Comments