சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்.இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத்தின் தலைவர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா.இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., துணை முதல்வரின் செயலாளர் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., பெருநகர சென்னை வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் சு.பிரபாகரன்.இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments