இந்திய குற்றவியல் சங்கத்தின் 6 வது சர்வதேச மற்றும் 45 வது அகில இந்திய குற்றவியல் மாநாட்டினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னைப் பல்கலைக்கழக செனட் அரங்கில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் குற்றவியல் துறையின் சார்பில் நடைபெற்ற இந்திய குற்றவியல் சங்கத்தின் 6 வது சர்வதேச மற்றும் 45 வது அகில இந்திய குற்றவியல் மாநாட்டினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழு உறுப்பினர் முனைவர் சூ.ஆம்ஸ்ட்ராங், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ச.ஏழுமலை, முன்னாள் டிஜிபி முனைவர். P.M. நாயர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கட்டுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
0 Comments