Loading . . .




தமிழ்நாடு மருத்துவத்துறை கட்டமைப்பு பற்றி கேட்டறிந்த மத்திய, மாநில குழுவினர்

The Forecast 1 year ago தமிழ்நாடு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக அலுவலகத்தில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜி அபித்கர் (Shri.Prakashji Abitkar), சுகாதாரத்துறை இணை அமைச்சர் மேகனா போர்டிகர் (Smt.Meghana Bordikar) மற்றும் அவர்கள் குழுவினர் சந்தித்து தமிழ்நாடு மருத்துவத்துறை கட்டமைப்பு பற்றி கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளர் மரு.உமாநாத், இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அரவிந்த், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.வினித், இ.ஆ.ப., மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்ரீகர் பர்தேசி, இ.ஆ.ப., (Shri.Shrikar Pardeshi) பொது சுகாதாரத்துறை செயலர்-| நிபுன் விநாயக், இ.ஆ.ப., (Shri.Nipun Vinayak) பொது சுகாதாரத்துறை செயலர்-II வீரேந்திர சிங், இ.ஆ.ப., (Shri.Virendra Singh) மருத்துவம் பொருட்கள் கொள்முதல் ஆணையம் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் அவாத், இ.ஆ.ப., (Shri.Mahesh Awhad) தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, மகாராஷ்டிரா மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் நிதின் அம்பேத்கர் (Shri.Nitin Ambadekar) மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News