தமிழகம் முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு முதல்வர் மருந்தகங்கள் அமைப்பதற்கான மானியங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு முதல்வர் மருந்தகங்கள் அமைப்பதற்கான மானியங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்தகுமார், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) எஸ்.பி. அம்ரித், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments