பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிக்காக கூடுதலாக 57 புதிய வாகனங்களை மேயர் ஆர்.பிரியா, ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
The Forecast 1 year ago தமிழ்நாடு
பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரத் தூய்மைப் பணிக்காக கூடுதலாக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 57 புதிய வாகனங்களை மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, தலைமைப் பொறியாளர் (பொது) கே.விஜயகுமார், பிரிமியர் பிரிசிசன் சர்ஃபேஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments