Loading . . .




வாடகை வாகனங்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி QR குறியீடுகளை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

The Forecast 1 year ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல்துறையின் முன்முயற்சியாக, சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி QR குறியீடுகளை வழங்கிடும் விதமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களிடம் QR குறியீடுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப., கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) ஆர். சுதாகர், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News