Loading . . .




மாநில அளவிலான அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

The Forecast 1 year ago தமிழ்நாடு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில், மாநில அளவிலான அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம் மற்றும் பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News