இலவச தடுப்பூசி திட்டத்தில் 100% இலக்கை அடைய தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது
Janani G 1 year ago தமிழ்நாடு
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும், அரசு மருத்துவமனைகள் மூலம் 90%க்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டாலும், 2வது தவணை செலுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், 100% இலக்கை அடைய தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
0 Comments