The Prague Chess Festival 2025 மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 -ந் தேதி வரை நடைபெற்ற 7 வது பிராக் செஸ் திருவிழா 2025 ல் (The Prague Chess Festival - 2025) மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் பெற்றோர் உடனிருந்தனர்.
0 Comments