Loading . . .




நடைபெறவுள்ள "நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை" குழுக் கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அழைப்புவிடுத்த தமிழ்நாடு முதலமைச்சர்

The Forecast 1 year ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கடந்த 05.03.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேற்கொண்ட முடிவின்படி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேற்று புதுதில்லியில் உள்ள தெலுங்கானா மாநில முதலமைச்சரின் இல்லத்தில், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்களை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தை ஒப்படைத்து, வருகின்ற மார்ச் 22 ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ள "நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை" தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

இந்நிகழ்வின்போது தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, கலாநிதி வீராசாமி, என்.ஆர். இளங்கோ, அருண் நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News