அனைத்து மண்டல வாரிய நீர்வளத்துறையின் பொறியாளர்களுடனான ஆய்வு கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைப்பெற்றது
The Forecast 1 year ago தமிழ்நாடு
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசால் அறிவிக்கப்பட்ட திட்ட uணிகளின் முன்னேற்றம் குறித்து மண்டல வாரியாக ஆய்வு, நீர்வளத்துறையின் முன்னோடியான திட்டங்கள் குறித்த முன்னேற்றம், நடைபெற்று வரும் முக்கிய திட்டப் பணிகள் குறித்த முன்னேற்றம், அணை புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்ற விவரங்கள் மற்றும் வெள்ளத் தணிப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அனைத்து அறிவிப்பு பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார். சிறப்பு தூர் வாரும் பணிகளை பாசன நீர் திறப்பிற்கு ஏதுவாக விரைந்து முடிக்குமாறும், இந்த நிதியாண்டின் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப., நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) சா.மன்மதன், நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளர் சு.ஸ்ரீதரன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments