நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது
The Forecast 1 year ago தமிழ்நாடு
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தலைமைச் செயலகத்தில், நடைபெறவுள்ள நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத் தலைவர்/அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் எஸ். விஜயகுமார், இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கே.விவேகானந்தன், இ.ஆ.ப., புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் கிரண் குராலா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ்.சிவராசு, இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments