Loading . . .




த.நா. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.ஒ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் சார்பில் மேம்படுத்தப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்

The Forecast 1 year ago தமிழ்நாடு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எம்.ஒ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும் இக்கல்லூரி மேற்கொண்டுள்ள மரம் நடும் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மலர்மாலைக்கு பதிலாக ‘மரம் சான்றிதழ்’ வழங்குவதுடன், வருகை தந்த விருந்தினரின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, பராமரித்து வருகின்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சரை சிறப்பித்து கல்லூரியின் முதல்வர் “மரம் சான்றிதழை” வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, எம்.ஓ.பி. வைணவ கல்லூரி முதல்வர் முனைவர் அர்ச்சனா பிரசாத், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., மத்திய வட்டார ஆணையர் கே.ஜெ.பிரவீன்குமார், இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர் நந்தினி  உள்பட கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News