Loading . . .




முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு கோடியே 47 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர் : மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

The Forecast 1 year ago தமிழ்நாடு

சட்டப்பேரவையில் நடந்த பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பொன்ஜெயசீலன் பேசும்போது, “எனது கூடலூர் தொகுதியில் பல பயனாளிகள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு காப்பீட்டு பலன்கள் விரைந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசிய பொது : “தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 47 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அதிகம் பேர் பயன்பெறும் வகையில் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், காப்பீட்டு தொகை வரம்பும் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சிகிச்சை முறைகளும் 1450-லிருந்து 2050 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதோடு இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் 970-லிருந்து 2175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் எந்தெந்த பயனாளிகளுக்கு எங்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுச்சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சர் பதிலளித்தார்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News