Loading . . .




ஒன்றரை ஆண்டுகளில் கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது : உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்

The Forecast 1 year ago தமிழ்நாடு

சட்டப்பேரவையில் நடந்த பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பொன்ஜெயசீலன் பேசும்போது, “அரசு கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வெறும் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. யுஜிசி விதிமுறைப்படி அவர்களுக்கு ரூ.57,100 ஊதியம் வழங்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பதலிளிக்கும்போது, “கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முதலில் ரூ.15 ஆயிரமும் அதன்பிறகு ரூ.5 ஆயிரம் உயர்த்தி ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளில் கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News