290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன் இ.ஆ.ப. பொதுப்பணித் துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், இ.ஆ.ப. தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்ணா இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments