Loading . . .




ஒன்றிய அரசால் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்கப்படாத 2,152 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

The Forecast 1 year ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் 2018-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசால் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை, PM Shri பள்ளிகள், மும்மொழிக்கொள்கை ஆகியவற்றை செயல்படுத்தாத காரணத்தால், கடந்த ஆண்டு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் ஒன்றிய அரசின் 60 சதவீதப் பங்கான 2,152 கோடி ரூபாய் வழங்கப்படாததால், பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, முதலமைச்சர் அந்நிதி ஒதுக்கீடு செய்து, தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்த நிதி வழங்கியமைக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

உடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News