காதி மற்றும் வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தலைமையில் மாநில அளவிலான மாவட்ட வன அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
The Forecast 1 year ago தமிழ்நாடு
காதி மற்றும் வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தலைமையில் மாநில அளவிலான மாவட்ட வன அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சென்னை வேளச்சேரி (கிண்டி) முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மாவட்ட வன அலுவலர்களுடன் மாவட்ட வாரியாக வனத்துறையில் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார். வனத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொண்டார். மேலும், வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் வன உயிரின வேட்டைத்தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வேட்டைத்தடுப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் எனவும், அரசு அறிவித்துள்ள பணிகள் அனைத்தையும் விரைவுபடுத்த வேண்டும் எனவும், வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படா வண்ணம் அவர்களது அடிப்படை தேவைகளான சாலை மற்றும் இதர வசதிகளை சட்டத்திற்குட்பட்டு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும், பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் சாலை வசதி மற்றும் நிலுவைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், யானை - மனித முரண்பாடுகளை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், காட்டுப்பன்றிகளை அப்புறப்படுத்துவதற்கும், அதனால் வேளாண் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வண்ணமும் ஏற்கவே உத்தரவிடப்பட்ட அரசாணையின் படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வன உயிரினங்களின் நீர்தேவையை தீர்க்கும் வண்ணம் ஏற்கனவே உத்தரவிடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் கூறினார்.
இக்கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பபாதுகாவலர் மற்றும் துறைத்தலைவர் சீனிவாஸ் ரா.ரெட்டி, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பபாளர் ராகேஷ்குமார் டோக்ரா, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குநர் ஐ.அன்வருதின், இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (நிர்வாகம்) தெபாஷீஷ் ஜானா, இ.வ.ப., கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) முனைவர் நாகநாதன், இ.வ.ப., இணை இயக்குநர் தமிழ்மொழி அமுது மற்றும் அனைத்து மாவட்ட வன அலுவலர்கள், வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments