கலை பண்பாட்டு, அருங்காட்சியகங்கள் துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கொள்கை விளக்கக் குறிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
The Forecast 1 year ago தமிழ்நாடு
நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் கலை பண்பாட்டு, அருங்காட்சியகங்கள் ஆகிய துறைகளின் சார்பில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கொள்கை விளக்கக் குறிப்புகள் மற்றும் வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் மருத்துவர் க. மணிவாசன், இ.ஆ.ப., தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் கவிதா ராமு, இ.ஆ.ப, கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி இ.ஆ.ப, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன், டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் சீ.சௌமியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments