Loading . . .




பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில், மாநில அளவில் சிறந்து விளங்கும் பலமுனை பட்டுநூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது

The Forecast 1 year ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சரால் சென்னை தலைமைச் செயலகத்தில், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டு மாநில அளவில் சிறந்து விளங்கும் பலமுனை பட்டுநூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்து விளங்கும் பட்டுநூற்பாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் கடந்த 25.03.2025 அன்று வழங்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த க.பிரகாஷ் த/பெ கமலேசன், மதிகோண்பாளையம், தருமபுரி மாவட்டம் பட்டுநூற்பாளருக்கு முதல் பரிசு ரூ.1,00,000/- மற்றும் வேதவள்ளி க/பெ ஜெயன், ராஜகோபால்கவுண்டர் தெரு, தருமபுரி மாவட்டம் பட்டுநூற்பாளருக்கு இரண்டாம் பரிசு ரூ.75,000/-ரொக்கப்பரிசு காசோலையாக தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் வே.அமுதவள்ளி இ.ஆ.ப., பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் கி.சாந்தி இ.ஆ.ப., மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News