சுற்றுலாத் துறை சார்பில் இரண்டாவது முறையாக நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டில் மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் பெரு மக்கள் கௌரவித்தனர்
The Forecast 1 year ago தமிழ்நாடு
சென்னை எம்.ஆர்.சி நகரில் சுற்றுலாத் துறை சார்பில் இரண்டாவது முறையாக நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துணை மேயர் மு.மகேஷ் குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்/தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., சுற்றுலா ஆணையர் /தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் (தமிழ்நாடு) டாக்டர் அ.அருண் தம்புராஜ். இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் கூ. வினீத், இ.ஆ.ப., தமிழ்நாடு கற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச.கவிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள், வெளிநாடு தூதரகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 Comments