Loading . . .




ரயில்வே துறையின் சார்பில் ரூ.1,332 கோடி செலவிலான திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

The Forecast 1 year ago தமிழ்நாடு

திருப்பதி - பகாலா - காட்பாடி இடையேயான 104 கிலோ மீட்டர் ஒரு வழி ரயில் பாதையை, இரு வழி ரயில் பாதையாக மாற்றும் ரூ.1,332 கோடி செலவிலான திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணி மேம்படுத்தப்பட்ட ரயில் பாதைத் திறன் இயக்கத்தை மேம்படுத்தி, இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறனை வழங்கும். பல்தடத் திட்டமானது செயல்பாடுகளை எளிதாக்கி கூட்ட நெரிசலைக் குறைக்கும். இது ரயில்வேயின் முக்கியப் பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இது, இப்பகுதியில் உள்ள மக்களை விரிவான வளர்ச்சியின் மூலம் "தற்சார்பானவர்களாக" மாற்றும், இது அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமான பன்முக இணைப்புக்கான பிரதமர் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் விளைவாக இந்த திட்டம் உருவாகியுள்ளது.

மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் தடையற்ற போக்குவரத்திற்கும் இது வகை செய்யும். ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று மாவட்டங்களை இணைக்கும் இந்தத் திட்டம், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 113 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும். இத்திட்டம், சுமார் 400 கிராமங்களுக்கும், சுமார் 14 லட்சம் மக்களுக்கும் போக்குவரத்தை மேம்படுத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News