21 கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான பத்திரங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் தங்க முதலீட்டிற்கான பத்திரங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் க.ரவிச்சந்திர பாபு, செல்வி ஆர்.மாலா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஜோபி ஜோஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments