Loading . . .




தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது 

The Forecast 1 year ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் வேந்தராக நீடித்துவந்த நிலையில், அதனை மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், சட்டப்போராட்டம் நடத்தி அரசு அதனை வென்றது. இதனைத்தொடர்ந்து, வேந்தராக தமிழக முதல்வர் கூட்டத்தை மு. க. ஸ்டாலின் நடத்தினார்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News