2,689.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 6 வழிச்சாலை மற்றும் சாலையின் இருபுறமும் 2 வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைத்தல் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
The Forecast 11 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகையில் நடைபெற்ற நிகழச்சியில் சென்னை எல்லைச் சாலை திட்டத்தின் கீழ் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை 2,689.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30.10 கி.மீட்டர் நீளத்திற்கு கடினப்புருவத்துடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை மற்றும் சாலையின் இருபுறமும் இரு வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைத்தல் பணிகளை தொடங்கி வைத்தார். இப்பணியில், 2 உயர்மட்ட மேம்பாலங்கள், 1 இரயில்வே மேம்பாலம் மற்றும் 2 பெரிய பாலங்கள் கட்டப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.இராஜேந்திரன், எஸ்.சந்திரன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் டாக்டர். இரா.செல்வராஜ் இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இ.ஆ.ப., நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் எஸ்.பழனிவேல் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments