இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, காமராஜர் துறைமுகம் லிமிடெட், எண்ணூர், போன்ற முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது
The Forecast 11 months ago தமிழ்நாடு
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, காமராஜர் துறைமுகம் லிமிடெட், எண்ணூர், திருவள்ளுர் மாவட்டம் மற்றும் சென்னை பெட்ரோ கெமிக்கல் கார்பொரேஷன் லிமிடெட், மணலி ஆகிய இடங்களில் நேற்று பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதல் மற்றும் கடல் வழி ஊடுருவல் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகை போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம், சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், காமராஜர் துறைமுகம் லிமிடெட் மற்றும் சென்னை பெட்ரோ கெமிக்கல் கார்பொரேஷன் லிமிடெட் ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பயிற்சிகள் கண்காணிப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோர காவல் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, மற்றும் மருத்துவக்குழுக்கள் இந்த மாதிரிப் பயிற்சியில் பங்கேற்றனர்.
0 Comments