சென்னை, தரமணியில் ரூ.39.33 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மூன்று படப்பிடிப்பு தளங்களுக்கான கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
The Forecast 11 months ago தமிழ்நாடு
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை, தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில், ரூ.39.33 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மூன்று படப்பிடிப்பு தளங்களுக்கான கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன்,இ.ஆ.ப., இணை இயக்குநர் (மக்கள்தொடர்பு) மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மு.மேகவர்ணம், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் எஸ்.மணிகண்டன், கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.முத்தமிழரசு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments