Loading . . .




மாநில திட்டக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது மற்றும் மாநில அளவிலான அடைவு ஆய்வு அறிக்கைகள் முதல்வரிடம் வழங்கப்பட்டது

The Forecast 11 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் செயல் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சந்தித்து, மாநில திட்டக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது மற்றும் மாநில அளவிலான அடைவு ஆய்வு அறிக்கையை (State Level Achievement Survey) வழங்கினார்கள். 

இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பி. சந்திரமோகன், இ.ஆ.ப., ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் மரு. எம். ஆர்த்தி, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News