நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
The Forecast 11 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப. நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறை தலைவர் திரு ஸ்ரீனிவாஸ் ரெட்டி, இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments