211 கோடியே 57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட்டடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
The Forecast 11 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 457 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1118 காவலர் குடியிருப்புகள் மற்றும் 211 கோடியே 57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட்டடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், இ.கா.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் முனைவர் மகேஷ்வர் தயாள், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments