2013 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த (BATCH) இந்திய வெளியுறவுப் பணி அலுவலர்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசிற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்
The Forecast 11 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், தங்களின் இடைக்கால பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக சந்தித்த 2013 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த (BATCH) இந்திய வெளியுறவுப் பணி அலுவலர்கள், வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து இழுக்கும் இடமாக தமிழ்நாடு திகழ்வதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசிற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments