Loading . . .




 "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 2024 ஆம் ஆண்டு இந்திய வனப் பணி அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

The Forecast 11 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு இந்திய வனப் பணி அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி பிளஸ்ஸி சிடேஜில், செல்வி எம்.வி. நிலாபாரதி, ஆர். அரவிந்த் குமார், மதுசூர்யா, செல்வி ஜே. பிபிஷா, பி. ராம் பிரகாஷ், செல்வி சி. ஸ்வேதா, பி. அருண் சீனிவாசன், ஈ.கே. சந்தோஷ் குமார், கே. தர்மதுரை ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., நான் முதல்வன் சிறப்பு திட்ட இயக்குநர் (போட்டித் தேர்வு பிரிவு) சி. சுதாகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News