11 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
The Forecast 11 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் - ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம்- விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர், சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை, திருவாரூர் மாவட்டம்- முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் - கொளக்காநத்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம். இ.ஆ.ப, உயர்கல்வித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப, கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் (தொழில்நுட்ப பிரிவு) வெ. சுகுமாரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments