Loading . . .




சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

The Forecast 11 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of "GCC Municipal Bonds' on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன், துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., தேசிய பங்குச்சந்தை தலைமைப் பொருளாதார வல்லுநர் டாக்டர் தீர்த்தங்கர் பட்நாயக், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., முதலீட்டாளர்கள். பங்கு முகவர்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News