தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சென்னை, தீவுத்திடலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் சார்பில் நடைபெறும் “தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025“ திறந்து வைத்து பார்வையிட்டார்
The Forecast 11 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, தீவுத்திடலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் நடைபெறும் "தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025" திறந்து வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு மீன் உணவு திருவிழாவையொட்டி சென்னை தீவுத்திடலில் 1,00,000 சதுர அடி பரப்பளவுள்ள குளிரூட்டப்பட்ட அரங்கம் அமைக்கப்பட்டு 50 அரங்கங்கள் கொண்ட சென்னை கடல்மீன் உணவு காட்சி கூடாரம், 15 அரங்கங்களுடனான மீன்வளம் மற்றும் வண்ணமீன்கள் காட்சிக்கூடாரம், 20 அரங்கங்களுடனான மீன் உணவு கூடங்கள், செயல்விளக்க கூட்ட அரங்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த உணவுத் திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், சமயற்கலை மாணவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கு சமையல் போட்டிகளும் நடத்தப்பபட்டது.
கடல்மீன்கள், குறிப்பாக இறால் மீன்கள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரோக்கியமான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. கடல்மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஐயோடின், தாதுக்கள், விட்டமின்கள் A, D, K உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.மூர்த்தி, அ.வெற்றியழகன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் ந.கௌதமன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் இரா.கஜலட்சுமி, இ.ஆ.ப., தேசிய மீன்பிடி மேம்பாட்டு வாரிய தலைமை நிர்வாகி டாக்டர் பிஜய் குமார் பெஹரா உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments